இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்கள் அப்துல்லா மஃறூப் எம்.பி யை சந்தித்துப் பேச்சு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசர்களுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெற்றது. குறித்த சந்திப்பானது நேற்று (04) வியாழக் கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் கிண்ணியா அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்களான மேரி ஜோஷ்சே, பீற்றர் பன்டி போன்றோர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் இலங்கை நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தங்களது கட்சிசார்ந்த முன்னெடுப்புக்கள் , முஸ்லிம் அமைச்சர்களின் பதவி இராஜினமா…
