Headlines

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும்,சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குதீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை அல்லதுமுஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும், தமிழ்த் தேசியகூட்டமைப்பின்…

Read More

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகதயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா?என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்பதியுதீன் பகிரங்க சவால் விடுத்தார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய் அவர் மேலும் கூறியதாவது, ”இந்த சபையின் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ஸஇனங்களுக்கு இடையே குரோத உணர்வுகளையும் வைராக்கிய சிந்தனைகளையும் தொடர்ந்துஏற்படுத்தி வருகின்றார். என்னைப்பற்றி பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்திஎனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றார். ” ”தெமட்டகொட குண்டுவெடிப்பு சம்பவத்தின் தற்கொலைதாரியான பெண் ஒருவர் எனது தாயின்சகோதரரின் மகள் என திரும்ப திரும்ப அவர் கூறி எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றார்.எனது தாய்க்கு சகோதர்கள் எவரும் இல்லையெனவும் விமல் வீரவன்ஸ கூறுவது சுத்தமான பொய்எனவும் நான் பொறுப்புடன் இந்த சபையில் கூறுகின்றேன். ” இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைத்து நல்லுறவை இல்லாமலாக்கும் விமல்வீரவன்ஸவின் கீழ்த் தரமான செயலை வண்மையாக கண்டிக்கின்றேன். வாக்குகளைஅதிகரிப்பதற்காகவே விமல் இந்த பொய்களை பரப்புகின்றார். தற்போதைய சூழ்நிலையில்இனங்களுககிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதே பொறுப்புள்ள அரசியல்வாதியின் பன்பாகும்ஆகும். ”நான் மூன்று பிள்ளைகளின் தந்தை, எனக்கென்று குடும்பம் உள்ளது, கட்சி ஒன்று உள்ளது . எனதுகட்சியில் பெரும்பாலான ஆதரவாளர்கள் உள்ளனர். இவ்வாறான பொய்யான பிரசாரங்கள் மூலம்என்மீதும் எனது சமூகத்தின் மீதும் விமல் களங்கம் கற்பிக்கின்றார். மக்களை நிம்மதியா வாழவைப்பதும் அவர்களுக்கான பணிகளை முன்னெடுத்து இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தைவளர்த்தெடுப்பதே எனது வேலைத்திட்டங்களாக இருக்கின்றன.” பயங்கரவாத்திற்கு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் ஆதரவளித்தவர்கள் அல்ல. இந்த சிறிய நாட்டில்இன உறவு தளைத்தோங்குவதற்கு முஸ்லிம்களாகிய நாம் பாடுபட்டு வருகின்றோம். உண்மைஎன்றொரு நாள் வெல்லும் என்பதை அனைத்து மதங்களினதும் போதனையாகும்.  என்றும் ரிஷாத்பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.

Read More

கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இன ரீதியானதும், நிலத்தொடர்பற்றதுமான பிரதேச செயலகத்தை வழங்கக் கூடாது எனக் கோரி, கல்முனையில் முஸ்லிம் மக்கள் நடத்திவரும் சத்தியாக்கிரக நடவடிக்கையில், இன்று வெள்ளிக்கிழமை…

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரலிய திட்ட ஒதுக்கீட்டில் இருந்து ரூபாய் 1.5 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சாவற்கட்டு கிராமத்திற்கான கிராமத்தகத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் வடிவுக்கரசி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு புனரமைப்பு…

Read More

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்

முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சவுத்பார் கிராமத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் கலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் வீதி திறப்புவிழா…

Read More

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே தீர்க்க முடியும். வேறு எந்தவொரு சக்தியாலும் அதனை மேற்கொள்ளமுடியாது. காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர். இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி…

Read More