Headlines

தெம்பிரியத்தேவல முஸ்லிம் வித்தியாலயத்தில் வகுப்பறைகான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கு இணங்க அல்-ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் அல் ஹாஜ் நூறுல்லாஹ் அவர்களின் ஊடாக குவைட் நாட்டு அரசின் நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெம்பிரியத்தேவல முஸ்லிம் வித்தியாலயத்தில் சகல வசதிகளுடனும் கூடிய வகுப்பறை கட்டிடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.

Read More

தோப்பூருக்கான தனி பிரதேச செயலகத்தை தடுப்பது இரா.சம்மந்தனே

இன்றைய காலத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான தனியான செயலகம் இதனை தடுப்பதற்கும் மூக்கை நுழைத்து செயற்படுவது அநியாயமாகும் இதற்கான தடைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்மந்தன் அவர்களே மேற்கொண்டு வருகிறார் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் இன்று (20) இடம் பெற்ற பள்ளிவாயல் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

பாணந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்

களுத்துறை மாவட்ட, பாணந்துறை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம், பாணந்துறை மல்சரா மண்டபத்தில் இன்று புதன் (20) மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக்கொண்ட அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கட்சியின் தவிசாளர் விவசாய, மீன்பிடி, நீரியல்வள இராஜாங்க அமைச்சர் கெளரவ அமீர் அலி கலந்து கொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சிறப்பதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன், பாணத்துறை ஜீலான் மத்திய…

Read More