Headlines

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சு: பிரதமரை சந்திப்பது எனவும் முடிவு!!!

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை (12) பாராளுமன்ற கட்டட தொகுதியில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள் உள்ளடங்கிய புத்தளம் கிளீன் அமைப்பினரும் புத்தளம் மக்களின் சார்பாக கலந்து…

Read More

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்த மக்கள் காங்கிரசின் தம்பலகாம மத்திய குழுவினர்!!!

திருகோணமலை மாவட்ட தம்டலகாமம் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்    இடம் பெற்றது. மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள். விவசாய நன்னீர் மீன்பிடி…

Read More

பாயிஸின் வீட்டின் மீது அதிகாலை குண்டுத்தாக்குதல்; பின் புறப்பகுதி முற்றாக சேதம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்று (12) அதிகாலை 2:30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன. சம்பவத்தை அறிந்து இன்று காலை போலீசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பாயிஸிடமிருந்து முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர். அரசியல்…

Read More

காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!!!துயரத்திலுள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல் -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டம் மூலம் மேற்கொண்டுள்ள தீர்மானம் துயரத்தில் உள்ள அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயலாகும் என இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வரை 6000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இதனை ஆரம்பமாக வைத்து அத்தொகையை மேலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேவேளை, வீதிகளிலும் வெய்யிலிலும் போராட்டம் நடத்தும் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு…

Read More