புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!
கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இன்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது, நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல் திட்டம் தொடர்பான விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அமைச்சர் ரிஷாட் அறுவைக்காட்டு குப்பை திட்டத்திற்கு தமது கட்சி …
