முசலி பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சார்ந்தோர் மண் அகழ தடை: அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க கூடாதென அமைச்சர் ரிஷாட் உத்தரவு !
மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களை சார்ந்தோர் மண் அகழ்வதை உடனடியாக தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்த ஆலோசனைக்கிணங்க முசலி மீளாய்வு கூட்டத்தில் அதற்கான ஏகமானதான தீர்மானம் எடுக்கப்பட்டது. முசலி பிரதேச செயலக மீளாய்வுக்கூட்டம் இன்று காலை (06) பிரதேச செயலாளர் வசந்த குமாரவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற போது, உள்ளூர் பிரதேசங்களில் வீடுகளை கட்டுவதற்கென மண் எடுப்பதற்கு அதிகாரிகளும் பொலிஸாரும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும்…
