Headlines

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்!!!

துறை முக அபிவிருத்தி தொடர்பில் ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் இன்று (14) வியாழக் கிழமை காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். காங்கேசன் துறை துறை  துறை முகத்தை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ,துறை முகங்கள் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் . ஆகியோர்களின்…

Read More

மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில்  மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட்  முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில்  அமைக்கப்பட்டுள்ள எம். எச். எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை (14) அதிபர் நூர் நளீபா சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சிறப்பதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, முஜிபுர் ரஹ்மான் எம்.பி , மேல்…

Read More

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு உபகாரங்கள் வழங்கிவைப்பு…

பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒட்டமாவடி ஷரிப் அலி வித்தியாலயத்திற்கும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கும் தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலிகலந்து கொண்டு வழங்கி வைத்தார். பிரதியமைச்சர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்…..

Read More

அதிர்வு நிகழ்ச்சியில் தலைமைத்துவ பண்புகளுடன் கருத்துக்களை வழங்கிய அமைச்சர் ரிஷாத் மக்கள் பாராட்டு!!!

வசந்தம் தொலைக்காட்சியில்  நேற்று 13 ஆம் திகதி இரவு இடம்பெற்ற அதிர்வு அரசியல் நேரடி நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக யாருடைய மனதையும் புண்படுத்தாத நிலையில் கண்ணியமாகவும் கச்சிதமாகவும் பதிலளித்ததன் மூலம் ஒரு சமூகத்திற்கு தலைமை பதவியை வகிப்பதற்கு இவர் தகுதியானவர்தான் என்பதை நிருபித்துள்ளார் என அரசியல் விமர்சகர்களும் நடுநிலை மக்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் தொடர்பான கேள்விகளுக்கு…

Read More

புத்தளம் குப்பைப்பிரச்சினைக்கு தீர்வுகாண தீவிர  முயற்சி : ஜனாதிபதி ,அமைச்சர் சம்பிக்க விடாப்பிடி! அமைச்சர் ரிஷாட் கூறுகிறார்.

புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரச  தொலைகாட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு  (13)  கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக  தங்கள் மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார். கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும்  புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டுவருவதன்  எதிர் விளைவுகளை நானும்  அமைச்சர் ரவுப் ஹக்கீமும் எடுத்துரைத்தோம். குப்பையை கொண்டுவருவதை  எதிர்த்து  பேசினோம். எனினும்…

Read More

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!!!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் உள்ளக கொங்கீரிட் பாதை திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் இன்று வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  மதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More