அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் ; முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !
பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து,உள்ளூர் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தத் தேவையான ஆலோசனைகள்.ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,உள்ளூர் அரசியல்வாதிகள் வீணான விமர்சனங்களிலிருந்து விடுபட்டு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். முசலி தேசிய பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களின் அங்குரார்ப்பணம் மற்றும் இல்ல விளையாட்டு போட்டி என்பன நேற்று (09) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசியல் அதிகாரம் என்பது நிலையானது அல்ல. அதிகாரங்கள் இருக்கும் போதுதான் அபிவிருத்திகளையும்…
