முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!
முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஏற்பாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் , தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை , கொழும்பு தெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல்,மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல் ,கொல்லன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில்…
