Headlines

ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி  காணப்படுகின்றது!

 –ஊடகப்பிரிவு- பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற அரிசிக்கான இறக்குமதி வரி கிலோவொன்றிற்கு 25 சதம் விதிக்கப்படுகின்ற போதிலும்,  பாகிஸ்தானிலிருந்து வரும் அரிசி மட்டும்  கிலோவொன்றிற்கு 50 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக உள்ளமை எமக்கு கவலையை தருகின்றது என, பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதம தலைமை நிறைவேற்று அதிகாரி ரபீக் சுலேமான் தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில், வர்த்தக அமைச்சின்…

Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான, காத்தான்குடியைச் சேர்ந்த அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இவர் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 2011 நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

ஐ.தே.க முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து மக்கள் காங்கிரஸில் போட்டி!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான உடையார், நஸார் மற்றும் ஹனீபா ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இம்மூவரும் உடுநுவர பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான நியமணப்பத்திரத்தில் இன்று காலை (19) கைச்சாத்திட்டனர். இதன்போது கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஹம்ஜாட், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.  

Read More

மு.கா ஜவாத் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்தமை உணர்வோடு தொடர்புபட்ட “தலைமை” மாற்றம்!

–ஏ.எச்.எம்.பூமுதீன்– கல்முனையை அஷ்ரப் காலம் தொட்டு கோலோச்சி வந்தவர்களில் ஜவாத்துக்கும் முக்கிய பங்குண்டு. கல்முனையில் இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ்  எனும் நாமம் ஒலிப்பதற்கும் ஜவாத்தின் வகிபாகம் இல்லை என்று எவருமே கூறவும் மாட்டார்கள். அப்படிப்பட்ட முன்னாள் பிரதி மேயர், மாகாண சபை உறுப்பினர் கே.ஏ.ஜவாத் நேற்று முதல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை உணர்வோடு தொடர்பான “தலைமை” மாறலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. “டயஸ்போராவுக்கு துணை போகும் ஹக்கீம்” என்ற ஜவாத்தின் கூற்று, அவர் கட்சிக்காக மாறவில்லை,…

Read More

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது” ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்!

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். “டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது. இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணம் ஆகும்” என அவர் தெரிவித்தார். “கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும், எதிர்கால சூழ்நிலைக்கும் ஏற்ற ஒருவராக, நான் அமைச்சர் ரிஷாத்…

Read More

சாய்ந்தமருது சுயேச்சை குழுவை ஆதரிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவு! மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஜெமீல் அறிவிப்பு!

  -ஊடகப்பிரிவு- சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் களமிறக்கப்படவுள்ள பொது சுயேச்சை குழுவுக்கு, தான் ஆதரவு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். தனது இந்த நிலைப்பாடு தொடர்பாக, அவர் சாய்ந்தமருது…

Read More

தொழிலதிபர் ஹனீப் தலைமையிலான சுயேச்சைக்குழு அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்தது!

-ஊடகப்பிரிவு-   உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு, சுயேச்சையாக போட்டியிடவிருந்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப் தலைமயிலான சுயேச்சை குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டது. கடந்த வாரம் கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேச சபையில் சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையிலேயே இந்தக் குழு, எதிர்வரும் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. குறித்த சுயேச்சை குழுவின் தலைவரான தொழிலதிபர் ஹனீப், மடவளை பசாரின்…

Read More