Headlines

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…

உள்ளூரட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை   (08/ 12/ 2017) இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள்…

Read More

முன்னாள் எம்.பி முஹம்மட் நௌஷாட் மக்கள் காங்கிரஸில் இணைவு!

முஸ்லிம் காங்கிரஸின்  முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில்  இன்று (08) இணைந்து கொண்டார். இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.        

Read More

வவுனியா மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில், வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை, பண்பாட்டுப் பெருவிழா-2017 நிகழ்வு வவுனியா, நகரசபை கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (04) நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், புத்தளம் தளவைத்தியசாலைக்கு 18 வைத்தியர்கள் நியமனம்!

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும்  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரின் உதவியினால் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான அபிவிருத்திகளை புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்குவதற்க்கான திட்ட வரைவு செயற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவியின் அழைப்பின் பேரில், புத்தளம் தள வைத்தியசாலைக்கான திட்ட வரைவு வேலைகளை முன்னெடுக்கும், CECB நிறுவனத்தின்…

Read More