Headlines

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் உறுதியளிப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (29/11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அடுத்தே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

“மக்களை தவறாக திசை திருப்புகின்றார் சார்ள்ஸ் எம்.பி” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்..

  சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான தரவுகளை உள்ளக கணக்காய்வு பிரிவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

Read More

பால் சேகரிக்கும் நிலையத் திறப்பு விழா!!!

திருகோணமலை மாவட்ட ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, பால்சேகரிக்கும் நிலையத் திறப்பு விழா அண்மையில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர். பிராந்திய முகாமையாளர் க. கணகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பால் பண்ணையாளர்களின் தொழில் முன்னேற்றத்துக்கான ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பொது முகாமையாளர் பெர்ணான்டோ, பிரதேச…

Read More