அடுத்த சர்வதேச கூட்டுறவு தினவிழாவை வடக்கில் கொண்டாட முடிவு கூட்டுறவுக் கொள்கை வரைபு தயார் என அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு
சுஐப் எம். காசிம் சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படுவதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருணாகலையில் இடம்பெறவுள்ள கூட்டுறவுத் தின விழாவையொட்டி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…
