பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி…
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையட்டும் இவ் ஈகைத்திருநாள். அளவற்ற அருளாளனும், அன்பில் நிகரற்றவனுமாகிய வல்லநாயன் அல்லாஹ்வின் திருப்பெயரை துதித்து, புனித ரமழான் முடிவில், மலரும் இவ் ஈகைத்திருநாளை மகிழ்வுடன் வரவேற்று, மனித அவலங்கள் தீர்ந்திடபிரார்தித்து, மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய், மனதாற ஆர்ப்பரித்து மகிழ்ந்திட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் முஸ்லிம் நெஞ்சங்களுக்கு. முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிப்பதற்க்கு சர்வதேச பயங்கரவாதம் முனைப்புக்காட்டி அதில் வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றது. இதுவே…
