புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக தமிழ்க்கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை
ஊடகப்பிரிவு வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க்கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, எங்களிடத்தில் கூறவேண்டும். பாராளுமன்றத்தில் நேற்று (06.06.2017) தினேஷ் குணவர்த்தன எம்பி முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு எதிரான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, 30வருடகால…
