Headlines

சதொசயின் புதிய கிளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்பட்டது.

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில்  50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம்  திறந்து வைக்கப்பட்டது. கைதொழில் வர்த்தக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள்  மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்

Read More

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு இரத்துச்செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை.

ஊடகப்பிரிவு வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் கஷ்டங்களின் மத்தியிலே தமது பூர்வீகக்காணிகளில் குடியேறியிருக்கும் முசலிப் பிரதேச மக்களுக்கு புதிய வர்த்தமானி அறிவித்தலால் அவர்களது சுயாதீனமான இயல்பு…

Read More

வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுங்கள், ஜனாதிபதியிடம் முசலி மக்கள் கடிதம் மூலம் கோரிக்கை. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவும் முடிவு

சுஐப் எம் காசிம் வில்பத்து வன சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பட்ட வனம் என அந்தப் பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சுமார் 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய  வேண்டுமென முசலிப் பிரதேசத்த்ன் பல்வேறு அமைப்புக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அவசரக்கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி பரிபாலனசபைகள், விவசாய அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர்…

Read More