தட்டிக்கேட்டால் துரோகிகள்! ஜால்ரா போட்டால் போராளிகள்! கந்தளாயில் ரிஷாட்
-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நானும், அமீர் அலியும், நஜீப் ஏ மஜீதும் அன்று தட்டிக் கேட்ட போது எங்களைத் துரோகிகளென…
