சிறைகளில் வாடிக்கிடக்கும் தமிழ் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பேதமின்றி அணி திரள்வோம் முல்லைத்தீவு சுதந்திர தின விழாவில் றிஷாட் அறை கூவல்!!1
சுஐப் எம் காசிம். இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில,; அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது சின்னஞ்சிறிய அழகான இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது…
