அரிசி இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டி நேரிடுமென அறிவிப்பு
சுஐப் எம் காசிம் அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் எச்சரித்துள்ளார். அரிசி இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கம் தெரிவித்த பின்னரும் அரிசியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதும் சந்தைக்கு அதனை விடாமலிருத்தலும் பிழையான நடவடிக்கையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற (2017.01.03) தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினராக அவர்…
