Headlines

காட்டு யானை தாக்கியதில் சிறுமி பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில், சனிக்கிழமை (03) மாலை, காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவெம்பு 1ஐச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11), அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர், ஈரக்குளம் கிராமத்துக்கு  சைக்கிளில் சென்றுவிட்டு, சந்தனமடு ஆற்றுப்பகுதிக்கு அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, குறித்த பாதைக்கு குறுக்கான வந்த காட்டுயானை, இவர்களை…

Read More

கலப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள கலப்புக் கடலில் நேற்று சனிக்கிழமை (03), பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடற்பரப்புக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 2 தடவையும் இம்மாதம் 1ஆம் திகதி ஒரு தடவையும் ஆயுதங்கள் சிக்குண்டன. இவ்வாறு மீனவர்களின் வலையில் தொடர்ந்து ஆயுதங்கள் சிக்குவதால், கடற்படையின் மேற்கொண்ட தேடுதலின் போது, ரி-56 துப்பாக்கி, கைக்குண்டுகள் 2…

Read More

ஒரு நாள் சிசுவை புதைத்த தாய் கைது

முஹம்மது முஸப்பிர் பிறந்து ஒரு நாளோயான ஆண் சிசுவை புதைத்தார் என்று சந்தேகிக்கப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (03) தெரிவித்த முந்தல் பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பிரதேசத்தில், தான் பிரசவித்த சிசுவை கடந்த வெள்ளிக்கிழமை (02) தன்னுடைய வீட்டு வளாகத்தில் தாயொருவர் புதைத்துள்ளார். இதன் பின்னர், சனிக்கிழமை (03) முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்ற தாய், தனது குழந்தை இறந்து பிறந்ததால்…

Read More

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் 3 கோடி ரூபா பெறுமதியானஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஹெரோயின் 2.24 கிலோ கிராம்  நிறையுடையது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஹெரோயினை கடற்படையினர்கைப்பற்றியுள்ளனர். புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது  குறித்த 6 பேரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும்அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த  ஹெரோயின் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வவுனியா விசேடபோதைபொருள் ஒழிப்பு பிரிவு…

Read More

டெங்கு நோயளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,419 ஆக உயர்ந்துள்ளது. குறித்த எண்ணிக்கையானது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 51.31 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

பாதுகாப்பு செயலாளரின் யோசனையை நிராகரித்த ஜனாதிபதி?

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்திருந்தார். எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, வார இறுதி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படாது.அவ்வாறு…

Read More

“வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும், மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை”

-ஊடகப் பிரிவு – வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் நேற்று (03/09/2016) மன்னாருக்கு விஜயம் செய்த, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மன்னார் கச்சேரியில்…

Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 70 ஆண்டுகள்!

1946ம் ஆண்டு செப்டம்பர் 06ம் திகதி முன்னாள் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார். அன்றைய அரசியல் மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் சிங்கள மகா சபை என்பன இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தன. இலங்கை தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய சேனநாயக்க தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் நிலைத்திருக்க, சிங்கள மகாசபையின் தலைவர் பண்டாரநாயக்க பின்னாளில் இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கியிருந்தார். இந்நிலையில்…

Read More

சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற ஆர்வம் காட்டும் அரச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் 3400 ஊழியர்கள் சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஓய்வு வழங்கும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 1,077 பேருக்கு ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பணியில் இருந்து விலகும் போது மொத்தமாக ரூபா 1.2 மில்லியனில் இருந்து ரூபா 3 மில்லியன் வரையில் அவர்களின் ஓய்வூதியத் தொகையும் நல்லெண்ணத்தொகையும்…

Read More

குர்திஸ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி

-எம்.ஐ.முபாறக் – ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது. யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும், அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத்தம் பெயரளவில் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அரசுக்கும் ஐ.எஸ் மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான யுத்தம் தொடர்கின்றது. இந்த நிலைமையால் அப்பாவி மக்களின் உயிர்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.  இந்த ஆயுதக் குழுக்களை நசுக்குகின்றோம் என்ற பெயரில் சிரியா…

Read More

770 கிலோகிராம் கடலட்டை மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 770 கிலோகிராம் கடலட்டைகளை, கல்பிட்டிய கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 500,000 ரூபாய் பெறுமதியான இந்தக் கடலட்டைகள் புத்தளத்திலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கடலட்டைகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தத் தொகை கடலட்டையை கடத்தி லந்த கல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள்

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கிரமமின்றி குப்பைகள் அகற்றப்படுவது தொடாபில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திர சாதனங்களின் உதவி நாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் குப்பை அகற்றுவதற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்வது சிரமமானது என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More