Headlines

பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிட அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து தூதுவர் மன்னாருக்கு விஜயம்

இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும் வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று (05) தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். மன்னாருக்கு  அமைச்சருடன் விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் உயர்தானிகர் மேஜர் ஜெனரல் ஷெய்ட் ஷகீல் ஹூஸைன் மன்னார் புதுக்குடியிருப்பில் தனது நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்ட பின்னர் அங்கு…

Read More

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளை ஜெனீவாவில் அங்குரார்ப்பணம்

ஐரோப்பாவின் சுவிட்ஸர்லாந்து ஜெனீவா நகருக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளை நேற்று முன்தினம் (03) ஜெனீவாவில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காட்சியின் இணைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன் தலைமையில், பிரான்ஸ் கிளையின் தலைவர் இஸ்ஸத் ரஹ்மான், பிரான்ஸ் கிளையின் உபதலைவர் ஸுஹீல் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் ஜெனீவாக் கிளையின் தலைவராக சகோதரர் ஸஜாத் அவர்களும், அமைப்பாளராக ஜிப்ரி அவர்களும் மற்றும் 11 பேரை உள்ளடக்கிய…

Read More

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் அரசும்: அதனை எதிர்க்கும் முஸ்லிம்களின் ஊர்வலமும்

04.11.2016  நேற்று (03.11.2016) கொழும்பில் இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைக்காதே” என்ற போராட்ட  ஊர்வலம் முஸ்லிம் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையும் கோஷமும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களாலும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இதனை ஏற்பாடு செய்தவர்கள் யாரென்பதை விடுத்து,  இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருளாக அமைந்த “முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடாதே” என்ற விடயமே இங்கு நோக்கத் தக்கதாகும். எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில்,  விசேடமாக…

Read More

ஆரையம்பதி பிரதேச பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி சத்தியானிந்தி, பனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கண்ணன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து…

Read More

பட்டிப்பளை பிரதேச  பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் அண்மையில் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலக செயலாளர் திருமதி தெட்சணகெளரி தினேஷ் ,பனை அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயன், பிரதி அமைச்சரின்…

Read More

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

Read More

சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை: நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது!

சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை: நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது! ஜெனீவா உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிசாத்… -சுஐப் எம்.காசிம் –      இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நவீன பொருளாதார மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டு தனது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், 2030 ஆம் ஆண்டில் உரிய அடைவு மட்டத்தை அடைவதே எமது குறிக்கோளாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக…

Read More

குலைக்கும் நாய் கடிக்காது….. ஞானசார (வீடியோ)

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடித்து துரத்துவோம் என்று கூக்குரலிட்ட ஞானசார தேரரின் ஆட்கள் மொத்தம் இருபதுக்குக் குறைந்த ஒரு மத குருவும் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மருதானை டேக்னிகள் சந்திவரை, சோர்வாகவும், களைப்பாகவும் ஆர்பாட்டம் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல சிங்கள மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்காததால்மேலும் வெறும் 20 இற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதாலும் விரக்தியடைந்து கெட்ட  தூசனத்துடனும், வார்த்தைகளை வெளியிட்டு கொண்டு அங்கிருந்து  களைந்து சென்றனர்.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐரோப்பிய கிளை இன்று அங்குரார்ப்பணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய நாட்டுக்கான கிளை ஒன்று இன்று 03/11/2016 வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இந்த கிளையினை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றார். இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒழுங்கினை ஐரோப்பிய நாடுகளுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் முஹீஸ் வஹாப்தீன்…

Read More

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை சிதைக்க, கைகோர்த்துள்ள சக்திகள் – ஏ.எம்.எம்.முஸம்மில்

“அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா கருத்து தெரிவித்திருப்பதும், இலங்கை முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் ஜி எஸ் பி ப்ளஸ்சை மீண்டும் இலங்கைக்கு பெற்றுத்தர இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் பதுளை மாவட்ட இணைப்பாளரும் , மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவருமான  ஏ எம்…

Read More

ஜெனீவாவில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிஷாத் உரை

சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய மாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்ற தூதுக்குழுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன்அவர்கள் தலைமையேற்று உரையாற்றியபோது…

Read More