Headlines

16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

நேற்று 29.12.2016 ஆம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலக செயலாளர் திரு கோபாலரட்ணம் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

Read More

முன்பள்ளி மாணவர்களின் ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும் – A.R.M.ஜிப்ரி

முன்பள்ளி பருவ மாணவர்களின் உடல், உள, ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களில் பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் இன்றியமையாதவர்கள் என கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சம்மாந்துறை அல் – அர்ஷத் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்டார் பாலர் பாடசாலையின் ஆண்டிறுதி அறுவடை எனும் தலைப்பிலான பரிசளிப்பு கலைவிழா அதன் அதிபர் எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில்…

Read More

குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு சீமந்து  மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில்  வாழும்  குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து  மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி வைக்கப்பட்டன.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

வளர் பிறை கழகம் – பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

நேற்று 29.12.2016 ஆம் திகதி வளர் பிறை கழகத்தின் புதிய நிர்வாக உறுப்பினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

Read More

கல்விமான்களை கொண்ட சமூகத்தை உருவாக்குவதே எனது கனவு – பிரதி அமைச்சர் அமீர் அலி

எனக்கு பிடித்த இரண்டு சமூகங்ளில் ஒன்று உழைக்கும் சமூகம் மற்றையது கல்விக்காக பாடுபடும் சமூகமாகும். உங்களை பொறுத்தரை நீங்கள் அதிகமாக உழைக்கும் பால் பண்ணையாளர்கள். உங்களுடைய உழைப்பை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மில்கோ பால் பண்ணையாளரின் முதலாம் தரத்திற்க்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் க. கனகராஜா தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம…

Read More