Headlines

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் என். வில்வரெட்னம் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

புத்தள மாவட்ட அ.இ.ம.கா பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட பிரதான காரியாலயத்தில்  சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பின்போது தகரங்கள் மற்றும் சீமந்து பொதிகள் அலி சப்ரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

27.12.2016 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார, முகாமையாளர்களான பஷீர், அஸீஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

“சிங்கள, முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி”  அமைச்சர் றிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு https://www.acmc.lk/?p=23395

ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்;படுத்தி சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு இனவாதிகளின் இலக்காகுமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அல் அஸ்ரபியா அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் ரிஷாட்…

Read More

வாழ்வாதார உபகரணங்களை கொண்டு வாழ்வினை முன்னேற்றுங்கள் – பிரதி அமைச்சர் அமீர் அலி

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு அவர்கள் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருமானங்களை ஈட்டி வறுமையின்றி வாழ வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். மட்டக்களப்பு மாவடத்தின் செங்கலடி பிரதேச செயலக நடைபெற்ற வாழ்வாதாரண உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற் கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வாழ்வாதார உபகரணத்தை பெற்று செல்லும் ஒவ்வொரு…

Read More