Headlines

“றிஷாத்தின் தீர்வு நகர்வுகள் இருபுறமும் கூரான கத்தியைப் போன்றிருக்கின்றது” – சேகு இஸ்ஸதீன்

(முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணியுமான சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) முஸ்லிம் சமஷ்டி என்ற தொனிப்பொருளில் 48 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டுள்ளார். வட – கிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பிலும் அவர் தனது அனுபவங்களையும் யதார்த்த நிலையையும் அந்த நூலில் அக்குவேறு ஆணி வேறாக வெளிப்படுத்தியுள்ளார். முஸ்லிம் சமஷ்டி என்ற நூலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் நிலைப்பாடுகளை அவர் இவ்வாறு…

Read More

பாலர் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அனுராதபுரம், கட்டியாவ பிரதேசத்தில், அண்மையில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

நேற்று (2016.12.14) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கால் நடைகளுக்கு ஏற்படும் குரைநோய் மற்றும் வாய் நோய் சம்பந்தமாக சார்க் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற 03வது வருடாந்த தொடக்க நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Read More

உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் (வீடியோ)

கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் றிஷாத்

இலங்கையானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே  முற்போக்குத் தன்மைகளையும் பிராந்திய பொருளாதார கேந்திர நிலையமாக விளங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று மாலை (14) கொழும்பு சின்னமன் லேக் சைட் ஹோட்டலில் தஜிகிஸ்தான் – இலங்கை வர்த்தக உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான், தஜிகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அஸ்லோவ் சிரோஜிடின், தஜிகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ஹிக்மதுல்லோசோடா நெமதுல்லோ, இலங்கைக்கான தஜிகிஸ்தான் தூதுவர்…

Read More

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி

மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய தீய சக்திகள் முயற்சி. புத்தளம் மாவட்ட மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான முஹ்சி தெரிவிப்பு புத்தளம் மாவட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம். எச் . எம் நவவியை நியமித்து, சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை மிகவும் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதாகும். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நவவியை அமைச்சர் பதவி விலகச்…

Read More