Headlines

சிறுபான்மையை அடக்கியாள்வதில் பேரினக்கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றன

பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் இருக்கும் சில வேற்றுமைகளால் முட்டி மோதிக் கொண்டிருந்த போதும், அந்தக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பல அரசியல்வாதிகள் சிறுபான்மைச் சமுகங்களை அடக்கி ஆள்வதில் தமக்குள் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதின் தெரிவித்தார். குருநாகல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் மக்கள் காங்கிரசின் கல்விக் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் ரிஷாத் பதியுதீன் பவுன்டேசன் அனுசரணையில் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத்…

Read More

இலங்கையில் சுற்றுலா மேலாண்மை அங்கீகாரம் முதன் முறையாக வெளியிடப்பட்டது!

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் எழுச்சிக்காகவும் அதனை ஒரு தகுதிசார் தொழில் துறையாக முன்னெடுப்பதற்கு இலங்கையில் தொழில்முறை மேலாண்மை அங்கீகாரம் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இந்த அங்கீகாரம்‘சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதி மற்றும் மேலாண்மைக்  கணக்கியல் நிறுவனத்திற்கே‘ வழங்கப்பட்டது   இவ் அங்கீகாரத்திற்கான அங்குரார்ப்பண அமர்வானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் மற்றும் அதன் தகுதியினை பெற்ற சான்றளிக்கப்பட்ட விருந்தோம்பல் நிதிமற்றும் மேலாண்மைக்  கணக்கியல் நிறுவனத்தின் தலைமையில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது….

Read More

விடத்தல் தீவு பாடசாலை ஒளிவிழாவில் றிப்கான் பதியுதீன்

விடத்தல் தீவு பாடசாலை ஒன்றினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிகழ்வின் முடிவின் பின்னர் விடத்தல் தீவு கிராமத்தினை பார்வையிட விஜயமொன்றை மேற்கொண்டார் மீனவர்களது பிரச்சனைக்கான தீர்வை காணும் நோக்குடன் மீனவர்கள் சிலரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார் இதன்போது தமது பிரச்சனையாக அணை கட்டுவது தொடர்பாக முன்வைக்கப்பட்டது இதனை நேரடியாக பார்வையிட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Read More

“ஹிஜாப், பர்தா அணிவதில் எவ்வித தடையும் இல்லை” – அரசாங்கம் அறிவிப்பு!

முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை. அப்படியானதொரு சட்டம் நாட்டில் இல்லை. அது அரசின் நிலைப்பாடு அல்ல. முள்ளி பொத்தானை சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். அத்துடன் ஆசிரியர்களுக்கும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முள்ளி பொத்தானை சிங்கள…

Read More

“பள்ளிவாசல்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுங்கள்”- அமைச்சர் றிஷாத்

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் த்திரதாரிகளை அடையாளம் காணுவதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நடை முறைப்படுத்துவதற்கு நம்மாலும் உதவ முடியும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இரவு…

Read More

பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல் (வீடியோ)

கலவரத்தில் சொத்துக்களை இழந்த முஸ்லீம்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை – பாராளுமன்றத்தில் ஓங்கி ஒளித்த அமைச்சர் றிஷாதின் குரல்.

Read More