“இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள்” – அமைச்சர் றிஷாத் உருக்கம்
இனவாதத்தை நிறுத்தி நிம்மதியாக வாழவிடுங்கள். கடந்த அரசாங்கத்திற்கு நடந்தது இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு படிப்பினை என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சர்ஜான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாம் அரசியல்வாதிகளாக விரும்பி வந்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகளாக வருவோம் என்று நினைத்தவர்களும் அல்ல. அரசியலைப்பற்றி சிந்திக்க முடியாத காலத்தில் எங்களுடைய மக்களின் கண்ணீரும் கம்பளையுமே எங்களை அரசியலுக்குள் தள்ளியது….
