மன்னாரில் மண் அகழ்வுக்கு தனியாருக்கு தடை: அபிவிருத்திக் குழு அங்கீகாரம்
இந்த வருடம் டிசம்பர் 31இற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) வழங்குவதில்லையெனவும் மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அந்தப் பிரிவிலுள்ள பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்படும் ஒன்றியத்தின் வழியாக அவசியத் தேவையானவர்களுக்கு மாத்திரமே பெர்மிட்களை வழங்குவதெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானும் கூட்டாக விடுத்த அறிவிப்பை மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மண் அகழ்வினால் அந்தப்பிரதேசம் பாதிக்கப்படாத…
