Headlines

வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு

07.11.2016ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Read More

வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

நிலப்பகுதிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கல்லடிவெலி வாவி மற்றும் அதனே சூழவுள்ள விவசாய நிலப்பகுதிகளை இன்று (07.11.2016)பார்வையிட்டார். இதன் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தொடர்ச்சியாக நீர்ப்பாசன நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும் மேட்டு நில பயிர்செய்கையாளரின் நீண்ட நாள் தேவையினை நிவர்த்திக்கும் முகமாக நீர்ப்பாசன வாய்க்காலினை புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் போரதீவுப்பற்று…

Read More

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , சாணக்கியன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் வில்வரட்ணம் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளையடுத்து இஷாக், ஷாபி நிக்கவெரட்டிய பள்ளிவாசலுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிவு!       

குருநாகல், நிக்கவெரட்டிய டவுன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்வி, கலாச்சார பணிப்பாளருமான டாக்டர்.ஷாபி ஆகியோர் இன்று நண்பகல் {07/11/2016} அங்கு சென்று பள்ளிவாசல் முக்கியஸ்தர்களைச் சந்தித்து  நிலைமைகளை நேரில் கேட்டறிந்தனர். பள்ளிவாசல் தலைவர் கே.எம்.எம்.ஹமீத் மற்றும் நிருவாக சபை உறுப்பினர் நவாஸ் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்து,…

Read More