Headlines

கரும்பு பிரச்சினை தீர்வுகாண அமைச்சரவைப்பத்திரம்

–சுஐப் எம்.காசிம்  – அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையத் தீர்ப்பதற்காக, அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும், வெகுவிரைவில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கரும்பு உற்பத்தியாளர்களையும், ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையை நிருவகிக்கும் கல்லோயா பிளான்டேசன் நிருவாகிகளையும், அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (01/09/2016) அம்பாறைக் கச்சேரியில் சந்தித்து, இரு தரப்பினரினதும் கருத்துக்களை அறிந்துகொண்டார். இந்த சந்திப்பில் அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும்…

Read More

பான் கீ மூன் – அமைச்சர் றிஷாத் நாளை சந்திப்பு

-சுஐப் எம்.காசிம் – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை காலை (02/09/2016) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கம் கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்தும், நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஐநா செயலாளர் நாயகம் பான்…

Read More

குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதிலும் வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார். குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசுவதால் தொற்று நோய்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச  நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மீண்டும் சுனாமியா!

நாட்டில் மீண்டும் சுனாமி வந்தால் என்ன செய்வது என்று மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சுனாமி ஒத்திகையொன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த ஒத்திகை இடம்பெற உள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த ஒத்திகை நாட்டின் 14 மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், சுனாமியின் போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக…

Read More

யாழிற்கு நள்ளிரவிலும் பேருந்து சேவைகள்

ருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்து சேவையினைஇலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது. திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. மேலும் பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தினமும் நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 7.00 மணிக்கு இறுதியான பேருந்து சேவை…

Read More

இந்தியாவின் தொழில்நுட்ப கற்கைகளை பெற்றுக்கொள்ள இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக Indian Institutes of Technology (IITs) யின் விரிவுரையாளர்கள் அடங்கிய குழு ஒன்று செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. இக்கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி புதன்கிழமை…

Read More

பிரதமருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குமிடையில்; சந்திப்பு

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று மாலை (31) பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது

Read More

கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம்

கல்வி அமைச்சின் புதிய  செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Read More

கோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு…

Read More

ஐ.நா அலுவலகத்தின் முன்பு இராவண பலய ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராவண பலய அமைப்பு ஒரு மோசமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு இன்று (1) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை இராவண பலய அமைப்பின் பிக்குகள் முன்னெடுத்திருந்தார்கள். இதன்போது பான் கீ மூன் தமிழ் மக்களுக்கு சார்பானவர் என்றும், சிங்கள மக்களை கணக்கில் கொள்வதில்லை என்றும் பலத்த கோஷங்களை எழுப்பினார்கள். ஐ.நாவின் முன்றலில் ஒன்று கூடிய இவர்கள், பான் கீ முனுக்கு…

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More