Headlines

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

-சுஐப் எம் காசிம் அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் இன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில் நிதியமைச்சுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்ட போது, கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீண்டும் வலியுறுத்தி பேசினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தயாகமகேயும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தார்….

Read More

நவீன தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த ஜப்பான் இணக்கம்

120 மில்லியன் ஜப்பான் மக்களின் நாளாந்த வாழ்வில் செயற்திறனை விருத்தி செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள My Number எண்ணக்கருவினை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் Fukuda Sensai நேற்று முந்தினம்(26) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்களின் சகல தரவுகளையும் உள்ளடக்கி நாளாந்த வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியவாறு இலத்திரனியல் அட்டையினை…

Read More

பாடசாலைகளை அண்மித்த போதைப்பொருள் விற்பனையினை தடுக்க நடவடிக்கைகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும்  பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாணவர்களையும் நாட்டையும் பற்றிச் சிந்திக்காது பணம் உழைக்கும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். காலி கத்தலுவ மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (27) முற்பகல்…

Read More

பௌத்த சமயத்திற்கு பாதிப்பு ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது

நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கோ அல்லது பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது எனத் தெரிவித்தார். பௌத்த மக்கள் உள்ளடங்களாக எல்லா சமயங்களும் எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு முன் வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (27) பிற்பகல் கெட்டம்பே…

Read More

மாணவர் வருகை வழமைக்குத் திரும்பியது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்குத் திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு ஆளுநரிடம் அனுமதி

கல்முனை மாநகரசபை தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதி கோரப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார். தீயணைப்பு படையினருடனான கலந்துரையாடல் நேற்று கல்முனை மாநகரசபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார், முன்னாள் முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பெரும் முயற்சியினால் 2014ஆம் ஆண்டு கல்முனை மாநகரசபைக்கு தீயணைப்பு படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்போது அந்த பிரிவில் கடமையாற்றுவற்கு மாநகரசபையினால் 11 பேருக்கு தற்காலிக நியமனம்…

Read More

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Read More

‘எமக்கு பயமில்லை’

-வி.நிரோஷினி ‘நிர்ணயிக்கப்படும் திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது. நாம் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படவில்லை. கடந்த தேர்தல்களில் தைரியமாக முகங்கொடுத்து, வெற்றியீட்டிய எமக்கு, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி இலகுவாகவே அமையும்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read More

நாமலை உடனடியாக, கைதுசெய்ய நீதிபதி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று -28- உத்தரவிட்டுள்ளார். கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் 10 லட்சத்து 125 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளார். இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…

Read More

பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாது ; நாமல்

அரசுக்கு எதிராக கொழும்பை நோக்கி முன்னெடுத்துள்ள எமது பாதயாத்திரையை எவராலும் தடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். பாரிய சவாலுக்கு மத்தியில் இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம். ஆனால் பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அதனை உடைத்தெறிந்துள்ளோம். மக்களின் பலத்துடன் வீதிக்கு இறங்கியுள்ளோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆதரவை தேட இப்போது முயற்சிக்கின்றார். அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்தி சுயாதீன தன்மையை சர்வதேசத்திடம் ஒப்படைத்து நாட்டை…

Read More

அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று -28- வியாழக்கிழமை  ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More