Headlines

மீரிகம புகையிரத விபத்து : இருவர் காயம்

வில்வத்த மீரிகம பகுதியில் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பின்னால் புகையிரத இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தினால் மீரிகம அம்பேபுஸ்ஸ பகுதிகளுக்கான புகையிரத போக்குவரத்து தாமதப்பட்டுள்ளதாக புகையிரத சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

என்னையும் எனது குடும்பத்தையும் சிறையடையுங்கள்

என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள்.  அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில்  இடம்பெற்ற மத வைபவத்தில் உரையாற்றுகையிலேயே     முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

சுயாதீனமாக செயற்படுவேன் : இந்திரஜித் குமாரசுவாமி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார்.

Read More

நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு 3000 வைத்தியர்கள் தேவை

நாட்டில் சுகா­தார சேவையை முழு­மை­யாக வழங்­கு­வ­தற்கு; இன்னும் மூவா­யிரம் வைத்­தி­யர்கள் தேவைப்­ப­டு­கின்­றார்கள். ஆயினும் ஒரு வரு­டத்தில் ஆயிரம் வைத்­தி­யர்­கள்தான் பல்­கலைக் கழ­கங்­க­ளி­லி­ருந்து வெளி­யேறுகின்றனர். அவர்களுள் 250இற்கும் மேற்­பட்ட வைத்­தி­யர்கள் வெளி­நா­டு­க­ளுக்கு செல்­­கின்­றார்கள். இப்­பி­ரச்­சினை இன்னும் ஐந்து வரு­டங்­களின் பின்­னர்தான் தீர்க்­கப்­படும் என சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார். மத்­தி­ய­முகாம் வைத்­தி­ய­சா­லைக்கு அண்மையில் திடீர் விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்ட சுகா­தார பிரதி அமைச்சர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்:…

Read More

அடையாளம் காட்ட உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்தனர் என்று சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவரின் மாதிரி வரைபடங்களை பொலிஸ் தலைமையலுவலகம் வெளியிட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சாட்சியாளர்களின் தகவல்களுக்கு அமைவாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் ஓவிய நிபுணர்களால் இந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இவ்வாறு அவர்களது உருவங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் இந்த உருவ அமைப்பை ஒத்தவர்களை காணுமிடத்து அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப்…

Read More

எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை ஜீலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. இன்று (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பைரூஸ் ஹாஜி விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து

பொறுமை,தியாகத்துடனான அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இன ஐக்கியத்துடன் கூடிய ஆத்மார்த்த நட்பு, சமூக ஒத்துழைப்பு வளர்ச்சி கண்டு, நாட்டின் சுபீட்சம் மேலும் அபிவிருத்தியடைந்து, எமது தாய்திருநாட்டில் முஸ்லிம் மக்களுக்கெதிரான சதிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டு, அவை முற்றாக இல்லாதொழிந்து அனைத்து இன மக்களினதும் தனித்துவம் பேணப்பட்டு,உடன்பாடான மாற்றங்களுடன் இலங்கையர் அனைவரும் அச்சமின்ற,மனச்சஞ்சலமின்றி சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்ற துஆவினை வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன். அத்தோடு எல்லாம் வல்ல அல்லாஹ் ஏதோ ஒரு வழியில் எங்களுக்கு தந்துள்ளதனை வைத்து நாங்கள் நோன்புகளை நோற்று…

Read More

சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன் – அமீர் அலி பெருநாள் வாழ்த்து செய்தி

மலரும் புனித நோன்புப் பெருநாளில் சகல இன மக்களினதும் மன நிம்மதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். சகலரும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வை இந்த புனித தினத்தில் அடைய வேண்டுமென்பதே எனது பேரவா ஆகும். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்… பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்ட எமது இலங்கைத்திரு நாட்டில், சகல இன மக்களும் இன பேதங்களைக்கடந்த, ஒற்றுமையுடனும்,பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும்,…

Read More

விரைவில் எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம்

வேறு மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக…

Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ 90-100 ரூபா வரையிலும், தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 120 முதல் 145 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. சீனியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. ஒரு கிலோ சீனியின்…

Read More

மன்னார் உப்புக்குளம் மைதானத்தை புனரமைக்க நிதியுதவி

‘இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி’ என்னும் தொனிப்பொருளை மையமாக வைத்து வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மன்னார் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் தனது நிதியில் இருந்து மன்னார் உப்புக்குளம் அல் பதா விளையாட்டு மைதான புனரமைப்புக்காக 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினை இன்று திங்கட்கிழமை அல் பதா விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் தனது அலுவலகத்தில் வைத்து கையளித்தார். மேலும்…

Read More