கொலன்னாவ குப்பைகளை அகற்ற விசேட குழு
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் குவிந்து கிடக்கும் அசுத்த கழிவுகளை அகற்றுவதற்கான விசேட பிரிவொன்று நிறுவப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன் யாப்பா தெரிவித்தார். கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்காகவும் சீரமைப்பதற்காகவும் 141 மில்லியன் ரூபா நிதியை அமைச்சரவை…
