Headlines

சாலாவ வெடிப்பை வீடியோ செய்த மஹிந்த

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர்….

Read More

உயர்தர பரீட்சை எழுத புதிய வாய்ப்பு

எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று (11)கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

1500 அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளது-நிதி அமைச்சர்

கடந்த கால ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட 1500 வாகனங்கள் காணாமல்போயிருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்களுடன்இ டம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

Read More

சாதாரணதர பரீட்சார்த்திகள் அனைவரும் சித்தியடைய வைக்கப்படுவர்-கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவோர் அனைவரும் சித்தியடைய வைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட போது கல்வி அமைச்சர் இதனைத்தெ ரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மனித மூலதனத்தை முன்னேற்றுவதற்கு எதிர்காலத்திற்கு பொருத்தமான கல்வி மாற்றத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, அனைத்து…

Read More

சாலாவ மக்களிடம் இராணுவ தளபதி மன்னிப்பு கோரியுள்ளார்

சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு தீப்பரவல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குஉதவவென்று 12 சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அந்தப்பிரதேச மக்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வர 50ஆயிரம்படைவீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கையின் இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை சாலாவ தீப்பரவல் தொடர்பில் ஏற்பட்ட சேதங்களுக்காக தாம் பொதுமக்களிடம் மன்னிப்பை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் பொதுமக்களும் இராணுவத்தினரும் பாரிய பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவிசாவளையில் செய்தியாளர்களை சத்தித்தபோது இந்த கருத்துக்களை அவர்வெளியிட்டுள்ளார்.

Read More

மிஹின்லங்கா மூடப்படுகிறது

இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள் ஏற்கனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில சிரேஸ்ட அதிகாரிகள் பணிகளில் இருந்து விலகவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர். எனினும் இந்த நிறுவனம் மூடப்படுவதால் வேலையிழக்கும் 330 பேரின் நிலை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

Read More

மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்யப்போகும் கொரியா

இலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சாலாவ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு

சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

Read More

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தினை துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஒருவர் முதல் தடவையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள துருக்கி நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தினை துருக்கி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கெவுசொக்ளு எதிர்வரும் 14 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது துருக்கி நாட்டின் வெளிவிவகார அமைச்சர்  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More