Headlines

காற்று மாசடைதலில் கண்டி முதலிடம் – ஜனாதிபதி

கொழும்பு நகரத்தை தோல்வியடைய செய்து காற்று மாசடைதலில் கண்டி நகரம்  முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இலங்கையின் காற்று மாசடைதல் தொடர்பிலான ஆறாவது தேசிய மாநாடு நேற்று  (5) மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

Read More

தகவலறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விரைவில்!

விரைவில் பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது என்று  பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர்  கருணாரத்ன பரணவித்தார தெரிவித்தார். நேற்று முன்தினம்  (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த சட்ட மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சட்ட மூலத்தில் கவனம் செலுத்தக்கூடிய…

Read More

எம்.பி. பதவியைத் துறக்கத் தயார் – பாலித

நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கெட்ட…

Read More

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More

ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்துள்ளவர்களின் கவனத்திற்கு

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்­த­வர்­களில் 50 வீத­மானோர் கட­மையை நிறை­வேற்­று­வதில் அக்­க­றை­யின்­றியும் விருப்­ப­மின்­றியும் இருக்­கின்­றனர். ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை எழுத்து மூலம் உறு­தி­செய்­யா­விட்டால் ஹஜ் பய­ணத்­துக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டா­தென ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சம­ய­ வி­வ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார். 2016 ஆம் வரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை…

Read More

தேசிய இராணுவ மாத கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

தேசிய இராணுவ வீரர்கள் மாதம் 2016 அறிவிக்கப்பட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று (05) ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் அனோமா பொன்சேக்கா கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய இராணு வீரர்கள் மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கொடி விற்பனையினூடாக பெறப்பட்ட நிதியும்…

Read More

பாடசாலை மாணவர்கள், வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்

அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்;த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை…

Read More

பஸ் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானம்

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி

– முகம்மத் பர்சாத் – புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் (Age 16) இலங்கையின் முதல் “முதல் முஸ்லிம் பெண் விமானியாகும்” முயற்சியில் முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில்  போர்ன்  கிளைடிங் கிளப்)ல் இனைந்து  ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார். கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிரார் நேற்று  சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்… “முஸ்லிம் பெண் விமானியாக” எமது…

Read More

களனி பல்­க­லை மாணவர்கள் ஐவர் கைது

நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­விக்கு பகிடிவதை செய்த அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரி­பத்­கொடை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். கிரி­பத்கொடை பொலிஸ் நிலை­யத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வான விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த ஐவ­ரையும் கைது செய்­த­தாக களனி பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னகோன் தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, தற்­போது…

Read More

நாடாளுமன்றில் இன்றும் குழப்பம்

அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமையும் உறுப்பினர்களால் குழப்பநிலை ஏற்பட்டதை அடுத்து, சபாநாயகரால், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற, நிதியமைச்சினால் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் போலியானவை என, இன்றைய தினத்திலும் வாத விவாதங்கள் ஏற்பட்ட நிலையிலேயே, சபை அமர்வு, 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More

சொகுசு பஸ் நடத்துனர்கள் பணி பகிஷ்கரிப்பு

காலி – கொழும்பு சொகுசு பஸ் நடத்துனர்கள் இன்று (6) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலி – கொழும்பு அதிவேக பாதையில் புதிய நான்கு பஸ்களை சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பஸ் நடத்துனர்கள் தெரிவித்துள்ளர்.

Read More