Headlines

சாரதியின் நித்திரை கலக்கத்தினால் வாகனம் தடம்புரண்டது : கட்டிடம் சேதம்

கொழும்பு அட்டன் பிராதான வீதியில் கித்துள்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற ஒருவர் கினிகத்தேன வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். கித்துள்கலை பொலிஸ்பிரிவிற்குட்பட்டு கலுகல பகுதியிலே இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி கலுகல சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமுற்ற சாரதி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் மலசலகூடம், பாடசாலை மதில் என்பன சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

மீண்டும் மின்தடை.!

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழ் அகதி

தமிழகத்தின் சேலம் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சேலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார் என்பவரே இவ்வாறு  தனது கழுத்தை அறுத்துக் கொண்துள்ளார். இவர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம். நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்ஸில் வந்த இவர், புது…

Read More

ஆண் சிசுவின் சடலம் மீட்பு.!

கண்டி, அம்பிட்டிய வீதியின் காண் ஒன்றில் இருந்து ஆண் சிசுவின் சடலத்தை இன்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கண்டிப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டம்

சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் இன்று வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Read More