கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவு வெளியானது
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின. முடிவுகளை பார்வையிட : www.donets.lk
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் சற்றுமுன் வெளியாகின. முடிவுகளை பார்வையிட : www.donets.lk
கிருளப்பனையிலுள்ள கடையொன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், பிரதேச மக்கள் மற்றும் கிருளப்பனை பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எதிர்வரும் முதல் 23ஆம் திகதி மாலை 3.09 மணி முதல் 7.24 வரை தோன்றுமென கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சன்தன ஜயரட்ண தெரிவிக்கின்றார். இந்த சந்திர கிரகணம் கிழக்கு வானில் தெரியும். இது நிழல் சந்திர கிரகணம் என்பதால் சந்திரனின் ஒளிமங்கலாகத்தெரியும். இவ்வருடத்தில் மற்றுமொரு சத்திர கிரகணம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி நள்ளிரவு நிகழுமெனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிராதன வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் மௌலவி ஒருவர் பலியாகியுள்ளார். இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மிக வேகமாக ஆரையம்பதியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் பலத்த காயாங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபின்னர் மரணமானார். இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த…
மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி ஜூஸ்லா பாமசிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணித்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயது அபுல் ஹசன் முஹம்மட் ஒஸாமா மரணமடைந்துள்ளார்.