Headlines

கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்- கர்தினால்

கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித்  தெரிவித்துள்ளார். கொழும்பு பிசோப் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் மற்றும் கடும்போக்குடைய அமைப்புக்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறான கட்சிகள் அமைப்புக்கள் எம்மை ஐக்கியப்படுத்த முயற்சிப்பதில்லை. மாறாக எம்மை பிளவடையச் செய்யவே முயற்சிக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் கடும்போக்குடைய அமைப்புக்கள் மற்றும் இன மதவாத அடிப்படையிலான அரசியல்…

Read More

பாண் விலை அதிகரிப்பு

அனைத்து பேக்கரி உற்பத்தி விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு இறாத்தல் பாணின் விலையும் பனிஸ் ஒன்றின் விலையும்  5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்  கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் சத்தியபிரமாணம்

சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் தேவை கருதி திடீர் மரண பரிசோதகர்கள் மூவர் நியமனம் பெற்றுள்ளனர். நோர்வூட் பொதுசுகதார பரிசோதகர் கே.ஜெய்கணேசன், மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் பீ.கே.விஜேவீர அம்பகமுவ, பீ.கே.எல்.வசந்த பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர் பொகவந்தலா ஆகிய மூவரே நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜ.பீ.டீ லியனகே முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.

Read More

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்

– K.Kapila – இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐ.நா. அதிகாரிக்கு முன், துணிச்சலை வெளிப்படுத்திய றிஷாத்

இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப்  பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக்  காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை…

Read More

சிராஸ் மீராசாஹிப் நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் நேற்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக…

Read More