மஹிந்தவின் ஆட்சியில் பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டவர்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்கு ஜே.வி.வி மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டவர்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்கு ஜே.வி.வி மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக கூறப்படும் சதி தொடர்பில் இதுவரை 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வாக்கமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொண்டதாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தினத்தின்…
இங்கிலாந்தின் டாக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசிலை பெற்ற அவர் அங்கு பயிற்சிநெறியை நிறைவு செய்யாமலேயே இலங்கை திரும்பிவிட்டார். எனினும் கடற்படையின் பெஜ்டொப் பயிற்சியை எவ்வாறு நிறைவுசெய்தார் என்று விசாரணை செய்யுமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அத்துடன் அரசபணியில் இருந்தநிலையில் எவ்வாறு தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திச் செல்ல முடியும் என்றும் விசாரணை செய்யுமாறு ஜே விபி உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர். இந்த முறைப்பாடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பியின்…
பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு – செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இதன் மூலம், எவ்வாறான நிவாரணங்களை பெற்றுக் கொள்வரென கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளது. கடற்படை அதிகாரியாக இருந்த யோசித்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறு பிரித்தானியாவின் டார்ட்மவுத் கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் கிடைத்தது, அங்கு கல்வியை முடிப்பதற்கு முன்னர் எவ்வாறு அவருக்கு இலங்கை கடற்படையின் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது, அரசாங்க அதிகாரியாக இருக்கும்போது அவர் எவ்வாறு தனியார் நிறுவனமொன்றின் உரிமையைப் பெற்றிருக்க முடியும் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய…
அஸ்ரப் ஏ சமத் கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவாவின் 30 ஆண்டுகளாக எழுதி வருகின்ற முஸ்லீம் பெண் நாவல் எழுத்தாளர்.; இதுவரை 8 நாவல்களை எழுதியுள்ளார். இன்று கடுவலை வெலிவிட சிங்கள பிரதேசத்தில் முதன்முதலாக தமிழ் மொழியில் நாவல் நூல் வெளியீட்டு வைக்கும் வைபவம் ஜரினா முஸ்தபாவின் வெலிவிட்ட இல்லத்தில் நடைபெற்றது. இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கொழும்பில் இருந்து கடுவலைக்கு பல இலக்கியவாதிகள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். நூல் வெளியீட்டு வைபவம் கலைவாதி கலீல் தலைமையில்…
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராவது நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றிருந்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேசப் பொலிஸாரின் உதவியோடு அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதுவொன்றும் அவ்வளவு சிரமமான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாறினும் ஐ.நா முடிவில் மாற்றமில்லை என ஐ.நா மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.
கே.எம்.ரிப்காஸ் வெள்ளவத்தை,ஹெவ்லொக் சிட்டி மாடி வீட்டு தொகுதியில் 21 ஆம் மாடியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது அப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை மாபோலை, வத்தளை பிரதேசத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இக்குழந்தை 21 ஆம் மாடியில் இருந்து விழுந்து கடும் காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிகபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தை போலீசார் இது தொடர்பில் விசாரணைகளை…
அஸ்ரப் ஏ சமத் சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ சிறையில் இருந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு ராஜபக்ச கள்வர்கள் எனது 100க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை சூறையாடினார்கள். என்னையும் சிறையில் அடைத்தார்கள் எனது செயலான் வங்கி, பினாஸ் கம்பணிகளை பறித்தெடுத்தார்கள். அவர்களது ஆதரவாளர்களை அவ் கம்பணிகளின் தலைவர்களாக நியமித்தார்கள். கொள்ளுப்பிட்டியில் ரண்முத்து ஹோட்டலுக்கு அருகில் நான் கொண்டுவந்த ஹாயத் ரீஜென்சி கோட்டலுக்காக 10 பில்லியன் முதலிட்டேன் அதனையும் பசில் ராஜபக்ச தனது பெயருக்கு மாற்றியுள்ளார். என சிலின்கோ தலைவர்…
அஸ்ரப் ஏ சமத் லேக் ஹவுஸ் சகல பத்திரிகைகளின் ஆசிரிய பீட பணிப்பாளராக சமன் வக்கராச்சி நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே தினமின லக்பிம பத்திரிகைகளின் ஆசிரியராகப் கடமையாற்றியவர். அத்துடன் பிரி மீடியா முவ்மண்டின் உறுப்பிணரும் ஆவார். இந் நிகழ்வில் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீனும் கலந்து கொண்டார்.
சமீப காலமாக எமது ஊர்களில் இருக்கும் வைத்தியசாலைகளில் இரத்தம் பற்றாக்குறை இருப்பதாக சில தேடல்களிலும் , செய்திகளிலும் தெரிய வருகிறது. ஆகவே எமது ஒரு சொட்டு இரத்த தானத்தை செய்து ஒரு உயிரை காப்பாற்றுவோம். நமது ஊரில் நம்மோடு கலந்த நம் சொந்தங்களுக்கோ , உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ மற்றும் பலருக்கும் ஏதேனும் ஒரு விபத்து அல்லது அறுவை சிகிச்சை நடந்தாளோ அவசர காலங்களில் இரத்தம் தேவைப்படுகிறது. அப்படி தேவைப்படும் பொழுது அவர்கள் இரத்தம் கிடைக்காமல் மிகவும்…