Headlines

இணைய வழி முறைப்பாடு விரைவில்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில், இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களுக்கு போதிய தெளிவின்மையால் இது தொடர்பாக முறைப்பாடுகளை தெரிவிக்க மக்கள் பின்னிற்பதாகவும் தெரிவித்துள்ள ஆணைக்குழு இதனால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இணையத்தின் ஊடாக முறைப்பாட்டினை தெரிவிக்கும் செயல்திட்டமானது நடைமுறைப்படுத்தும் வரை பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 1954 என்ற…

Read More

சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டள்ளார். 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

நாலக கொடஹேவா கைது

விசாரணைக்காக நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் ஆஜராகிய பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் தயார்: திஸ்ஸ

ஐ.தே.க. வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , அக்கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு தொடர்ச்சியாக தூது விட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் கட்சியில் தான் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் கட்சிக்கும், கட்சித் தலைவருக்கும் தான் செய்த துரோகம் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் தயாராகவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்….

Read More

ஜனாதிபதி முன்னிலையில் றிஷாத் பதியுதீன் விடுத்த சவால்

– அமைச்சரின் ஊடகப்பிரிவு – வில்பத்து வனப்பகுதியில் நானோ எனது சமுகமோ ஒரு அங்குல காணியையேனும் அடாத்தாக பிடிக்வில்லை. அவ்வாறு பிடித்திருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு இந்த உயர் சபையில் சவால் விடுகின்றேன் என்றார் அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன். ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முன்னையிலையில் இந்த சவாலை ரிசாத் பதியுதீன் மிக ஆக்ரோசமாக விடுத்தார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சபையில் மிக ஆக்ரோசமாக…

Read More

கல்வியின் மூலம் முஸ்லிகளின் தலையெழுத்தை மாற்ற முடியும்

கல்விதான் நமது சமூகத்தின் ஒரே ஒரு சொத்து. மாணவர்கள் அதனை அக்கறையுடன் கற்பதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்ற முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் க.பொ.த சாதாரண தரத்தில் நாடாளாவிய ரீதியில் 9 ஏ தர சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் எம்.இஸட்.எம்.அஹம்மட் முனவ்வர் தலைமையில் பம்பலப்பிட்டி…

Read More