Headlines

19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு

நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தமது தகுதி பத்திரத்தையும் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். அதேநேரம் பிரான்ஸ், பஹ்ரெயின், க்ரோஷியா மற்றும் ஹங்கேரி ஆகிய மேலும் நான்கு நாடுகளின் தூதுவர்கள் தங்களின் தகுதி பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

Read More

மேதின கூட்டங்களின் நிமித்தம் போக்குவரத்து ஒழுங்கு மாற்றம்

நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17 மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. சிறிலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் கொழும்பு ஹயிட் பார்க்கில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் பொரெல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்திலும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டம் கொட்டாஞ்சேனையிலும் நடைபெறவுள்ளன. அதேநேரம்…

Read More

பொது­மக்­களின் பணத்தை சூறை­யா­டிய திரு­டர்­களை பிரதமர் எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க மாட்டார்

எம்.எம் மின்ஹாஜ் பொது மக்­களின் பணத்தை சூறை யாடிய திரு­டர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க முனைய மாட்டார். குற்­ற­வா­ளிகள் தொடர்பில் சாட்­சி­யங்­க­ளுடன் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. கால­தா­மதம் ஏற்பட்டபோதிலும் நீதி­மன்­றமே குறித்த நபர்­களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்­சு­றுத்­தல்­க­ளையும் விடுக்க முடி­யாது. எனினும் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் முடி­யு­மான அனைத்­தை­யும நான் செய்வேன் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார். இலஞ்ச…

Read More

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு கூறுவதனூடாக  மக்கள் அதிகாரத்தை உறுதிபடுத்தல்-மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் என்பனவாகும் 1.தேர்தல் ஆணைக்குழு 2. அரச சேவைகள் ஆணைக்குழு 3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு 4. கணக்காய்வு ஆணைக்குழு 5. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 6. லஞ்ச ஊழல் ஆணைக்குழு 7. நிதி ஆணைக்குழு 8. எல்லை நிர்ணய ஆணைக்குழு…

Read More

19ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, இதிலுள்ள நான்கு சரத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின் அமைக்கப்படும் புதிய பாராளுமன்றத்திலே அமுலுக்கு வர இருப்பதாகவும் அவர் கூறினார். நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பான 4 சரத்துகளே இவ்வாறு அடுத்த பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட இருக்கிறது. நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலே குறித்த சரத்துகள் அமுலாவது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்…

Read More

காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக முறைப்பாடு

கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை (28) முறையிட்டனர்.  அமைச்சர் அமரதுங்கவை நேற்று சந்தித்த, காணாமல் போனவர்களின் உறவினர், வெலிக்கடை சிறைச்சாலையில் தங்களது பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வின்…

Read More

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து டி சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை, தம்பவின்ன பகுதியில் சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Read More

உதயசிறி விடுதலையானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு…

Read More

சுய­ந­லத்தை நோக்­காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­தனர்

தமது சுய­ந­லனை கருத்திற் கொண்டே சுதந்­திர கட்­சியில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வான சிலர் ஜனா­தி­ப­தியின் பேச்­சுக்கு இணங்கி 19 ஆவது திருத்­தத்தினை நிறை­வேற்ற ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர் என நவ சம சமாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்கிர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார். கொழும்பில் நேற்று அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கியப்படுத்­துவோம் என்ற அமைப் பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், இதுவரை 19 ஆவது திருத்தம் அமு­லுக்கு வர­வேண்டும் என்ற கொள்­கை­யுடன்…

Read More

அவசரமாக உதவி செய்வோம்..!

அவசரமாக உதவி செய்வோம்..! பணம் மூலம் உதவி செய்ய முடிய விட்டாலும் செய்வதன் மூலம் உதவி செய்யும் கரங்களுக்கு செய்தியை எடுத்துச் செல்வோம். Please help Dear Friend I need your SUPPORT now please ,My son ZAIN who is now 6 years old has to do a urgent RADIATION TREATMENT for a brain tumor, the doctors predicted this last week And my…

Read More

கொழும்பு மாநகரில் நாளை 17 மேதினக் கூட்டங்கள்

கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார். 2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காகவும், 2250 பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேதினத்தன்று அத்தியாவசிய…

Read More

மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை

மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்க சம்மேளன மே தின கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More