Headlines

சிறைச்சாலைகளில் நடத்திய திடீர் சோதனைகளில் 73 கையடக்க தொலைபேசிகள்- 54 சிம்கள் கைப்பற்றப்பட்டன

இவ்வருடம் சிறைச்சாலைகளை திடீர் சோதனைகள் நடத்தியதில் இதுவரை 73 கையடக்க தொலைபேசிகளும் 54 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அனைத்து சிறைச்சாலைகளிலும் இத்திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 73…

Read More

முதல் மூன்று மாதங்களில் பேராதனை பூங்காவின் வருமானம் 160 மில். ரூபா

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் பேராதனை தாவரவியல் பூங்காவின் வருமானம் 160 மில்லியன் ரூபாய் என அதன் பணிப்பாளர் கலாநிதி பெரமுனேகம அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார். இவ்வருமானம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 600 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி – ஐநாவின் செயலாளர் நாயகம் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிட பிரதிநிதி ரொஹான் பெரேரா ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீமூனை நேற்று (22) ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு சான்றுகள் பாராட்டுக்கள் தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ரொஹான் பெரேரா தனது வாழ்த்துக்களையும் சான்றுகளையும் நாட்டின் சார்பாக தெரிவித்துள்ளார். பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வின் பின்னர் செயலாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஒன்று க்கு…

Read More

150,000 மெ.தொன் நெல் கொள்வனவுக்கு அரசு 7.2 பில். ரூபா செலவீடு

14/15 ஆண்டில் 150,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 7.2 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- இம்முறை பெரும்போகத்தில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நெல் கொள்வனவுக்கான நிதி மாவட்டச் செயலாளர்களினூடாக வழங்கப்படுகின்றன. உத்தரவாத விலைக்கே…

Read More

அல்- குர்ஆன் கூறும் உண்மைகள்!!! (படங்கள் இணைப்பு)

உங்கள் கண் எதிரே “குர்ஆன்” இறைவேதம் கூறும் ‪#‎வரலாற்று_உண்மைகள்‬ மற்றும் ‪#‎அறிவியல்_உண்மைகள்‬ இருக்கிறது.. இதை உங்களால் மறுக்க முடியுமா??? அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (அல்-குர்ஆன் . 55 : 19) (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (அல்-குர்ஆன் . 55 : 20) இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடம் ..ஆனால் இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர்…

Read More

ஜனாதிபதி மைத்ரி செய்ததை ஒபாமாவால் கூட செய்ய முடியாது; ஜோன் கெரி ஆச்சரியம்

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரான ஜோன் கெரி, இலங்கையில் 100நாட்கள் வேலைத்திட்டதில் நடைமுறைப்படுத்தப்பட்டவை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும், அமெரிக்க ஜனாதிபதியால் கூட இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகளவான உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜோன் கெரி, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை 100நாட்கள் வேலைத்திட்டம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டபோது ஒரு பக்கத்திலேயே அறிக்கையை எதிர்பார்ததாகவும், ஆனால் 3 பக்கங்களில் அறிக்கை கிடைக்கபெற்றதை அடுத்து ஆச்சர்யம் அடைந்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன்…

Read More

பிரான்ஸில் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகரித்து வரும் இஸ்லாமிய நூல்கள் விற்பனை!

சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டவுடன் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தற்போது தலைகீழாக மாறியுள்ளது. . முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டுள்ளது. நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் இன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு…

Read More

ரஷ்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை மாணவன் காயம்

ரஷ்ய பல்கலைக்கழகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 43 மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்திலேயெ இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் மலேசிய மற்றும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். தென் மேற்கு மொஸ்கோவிலுள்ள பிரோகோவ் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கை மாணவர் மொஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் 5 இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

”அப்புறப் படுத்துங்கள் ஆயுத களஞ்சியசாலையை” ஜனாதிபதி அதிரடி உத்தரவு

க்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலகட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்பதால், அதனை அங்கிருந்து…

Read More

அனைத்து நகரங்களுக்கும் வருகிறது வழிப்பாதைச் சட்டம்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் வழிப்பாதைச் சட்டத்தை அமுல்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பான போக்குவரத்து முகாமைத்துவம் குறித்த கூட்டமொன்று பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று வியாழக்கிழமை (23) நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில், மேற்படி வழிப்பாதைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது வெற்றியளித்துள்ளதை அடுத்தே அச்சட்டத்தை நாட்டின் ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக…

Read More

இத்திஹாதா பரீட்சையில் தஸ்கர ஹக்கானிய்யா முதலிடம்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது அல்ஹம்துலில்லாஹ். சென்ற 21 , 22 ம் திகதிகளில் அகுரனை ஜாமிஆ ரஹ்மானியாவில் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தினால் ஷரீஆப்பிரிவின் இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்  தஸ்கர அல்ஹக்கானியாவின் இறுதியாண்டு மாணவர்களான மாவனெல்லையைச் சேர்ந்த எம்.எச் முஹம்மத் ஸாதிக், அகுரனையைச் சேர்ந்த எம்,ஏ அப்துல்லாஹ் ஆகியோர் முதலாம்மிடத்தைப் பெற்றுள்ளனர். சுமார் 69 அரபுக்கல்லூரிகளிள் 138 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பரீட்சையில் இருவரும் 120 புள்ளிகளில் 119 புள்ளிகள்…

Read More

யெமன் மீதான போர் – சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்….!!

யெமன் நாட்டின் 90 சதவீத பகுதிகளை ஷியா தீவிரவாதிகள் ஆக்கிரமித்த பிறகு யெமன் அதிபர் ஹாதி தம்முடைய நாட்டை மீட்டுத்தருமாறு சவூதி மன்னர் சல்மான் அவர்களிடம் உதவி கோரினார். அதனை தொடர்ந்து உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் நாடுகள் ஏமனுக்கு படையெடுத்து ஷியா தீவிரவாதிகளை முற்றாக அழித்து நிர்மூலமாக்கியது. சுமார் 20 நாட்களில் முஸ்லிம் நாடுகளின் அதிரடியான தாக்குதலில் ஷியா தீவிரவாத இயக்கம் முற்றிலுமாக நிலைகுலைந்தது. அதனைதொடர்ந்து போரை…

Read More