Headlines

காத்தான்குடி நூதனசாலையில் உருவச் சிலை: ACJU பத்வா குழு கடிதம்

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூதனசாலை’ தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது…

Read More

100 நாள் வேலைத்திட்டம் வெற்றி: ஹர்ஷ டி சில்வா

நூறு நாள் வேலைத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, ஜனநாயக நல்லாட்சி உருவாக்கம், திருட்டுக்கள், ஊழல் ஒழிப்பு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களும் வெற்றிகரமாகி மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை திட்டமிடல் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா இவ்வாறு தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பது அரசின் நோக்கமாகும். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கி வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இடைக்கால…

Read More

வளைகுடா நாட்டு “ஹவுஸ் டிரைவர்”…..(வீட்டு டிரைவர் ). – ஒரு சிறப்பு பார்வை!!

ரொம்ப நாட்களாக, வளைகுடா நாட்டு “ஹவுஸ் டிரைவர்கள பத்தி ஒரு பதிவு எழுதனுமுன்னு நினைத்தேன் . இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது .பொதுவாக எல்லா வேலையிலும் ஒரு கஷ்டம் இருக்கும் ஆனால் கஷ்டத்தோடு சேர்த்து சங்கடமும் உள்ள வேலைதான் இந்த ஹவுஸ் டிரைவர் வேலை 1- அவர்களுக்கான சாப்பாட்டு நேரத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது அதை அவர்கள் வீட்டு முதலாளிதான் தீர்மானிக்க வேண்டும் . 2-கவலையை மறந்து நிம்மதியாக தூங்க முடியாது எந்த நேரத்தில் முதலாளி…

Read More

சுற்றுலா சோகம்.. பாணந்துறயில் இருந்து மன்னார் சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற வாலிபர் ஆற்றில் முழ்கி வபாத்

பாணந்துறயில் இருந்து இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் மன்னாருக்கு சுற்றுலா சென்ற குழுவில் நபீஸ் முக்தார் என்ற 18 வயது வாலிபர் ஆற்றில் மன்னார் முழ்கி வபாத் ஆகியுள்ளார். இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மன்னாருக்கு சுற்றுலா சென்ற வேளை அங்கு மைதானம் ஒன்றில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க இறங்கிய குறிப்பிட்ட இளைஞர் நீரில் அடிபட்டு சென்று வபாத் ஆகியதாக தெரிய வருகிறது.

Read More

அல்லாஹ்விடம்‬ பிரார்த்தனை – (ஓர் உண்மை கதை)

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டிற்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. மருத்துவ ஆய்விற்கான விருது அதில் அவரிற்கு வழங்கப்படவிருந்தது. அவர் மிக நீண்ட காலமாக செய்த உழைப்பின், அராய்ச்சியின் பயனாக அந்த விருது அவரிற்கு வழங்கப்படவிருந்தது. அதனால் அவர் மிகவும் ஆர்வமாக அதனை பெற புறப்பட்டிருந்தார். விமானம் அவரையும் சுமந்தவாறு புறப்பட்டது. இரு மணி நேரம் பறந்த விமானம் திடீரென அருகில் இருந்த விமான…

Read More

மக்களோடு மக்களாக மகிழ்ச்சியில் திழைக்கும் சவுதி மன்னர் சல்மான்! (வீடியோ இணைப்பு )

சையது அலி பைஜி சவுதி தலை நகர் ரியாத்தின் திரையா பகுதியில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட சவுதி மன்னர் சல்மான் தனது நாட்டு மக்களோடு மகிழ்ச்சியாக அரேபிய நடனமாடும் காட்சியை தான் காட்சி விளக்குகிறது மக்களோடு மக்களாக கலந்து பழகும் ஆட்சியாளராகவும் அவர்களின் மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும் தனது பங்களிப்பை செலுத் விரும்பும் மன்னராகவும் சவுதி மன்னர் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிட தக்க விசயமாகும் மன்னர் நடனம் ஆடுகிறாரே நடனத்திர்கும் இஸ்லாத்திர்கும் என்ன சம்மந்தம்…

Read More

மாஷா அல்லாஹ்! மதுபான லோகோவை அணிய மறுத்த யூசுஃப் பதான்…

IPL இல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் யூசுஃப் பதான் அந்த அணியின் விளம்பர உரிமையினை பெற்ற ‘Royal Stag’ என்ற மதுபானத்தின் லோகோ’வை அணிய மறுத்துள்ளார். அணியின் மற்ற வீரர்கள் “Royal Stag” லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம். இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.அவர் மதுபான லோகோ’வை அணியாமல் இருக்க கொல்கத்தா அணி நிர்வாகமும் அனுமதி…

Read More

எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காது….

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி தேர்தலின் மூலம் கிடைத்த திருப்புமுனை குறித்து பேரதிர்ச்சி க்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேன, நாடு ஒரு குடும்பத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்க இனிமேலும் இடமளிக்கப்படாது என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார். “நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சிறிது காலம் கடந்துள்ள போதும் நான் தான் ஜனாதிபதி என்பதனை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”யென ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

நவ்ரூ தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப தீர்மானம்

இலங்கையர்கள் உட்பட நவ்ரூ தீவில் தங்கியுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. புகலிடம் கோரி, சட்டவிரோத படகு பயணங்கள் மேற்கொண்டு வருகின்றவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏற்கனவே தமது நாட்டை வந்தடைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பீ.பீ.சீ. உலக சேவை தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் இந்த முடிவானது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகலிடம் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகளை…

Read More

தேசிய கீதத்தினை வடகிழக்கு பிரதேசங்களில் தமிழில் பாடவேண்டும்!- அமைச்சர் ராஜித சேனாரட்ன

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது மிகவும் சிறந்ததாக அமையும் எனவும் இனிவரும் காலங்களில் நான் இங்கு வருகை தரும் போது தமிழிலோ, ஆங்கிலத்திலே தான் பாடவேண்டும் என கௌரவ சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் நான் இங்கு மிகுந்த மனவேதனை அடைகின்றேன் காரணம் தமிழில் பேசமுடியாதமையினை இட்டு இதற்கு முதற்காரணம் எமது நாட்டில் உள்ள கல்விக் கொள்கையாகும்…

Read More

(UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் றிஷாத் பதியுதீனுடன் சந்திப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் மலேசியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும்(UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் இன்று கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். மலேசிய குழுவிற்.கு இந்தியா  ETA நிறுவனத்தின் பொது முகமையாளர் அகமத் றிபாய் தலைமை தாங்கினார். மலேசியாவில் இயங்கிவரும் University College Of Teechnology Sarawak பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரம் கல்வி செயற்பாடு தொடர்பில் அமைச்சருக்கு பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர்.அதே வேளை உயர்கல்வி தொடர்பில் இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்கு இந்த பல்கலைக்கழகம் தயாராகவுள்ளதாக அமைச்சரிடத்தில பல்கலைக்கழக…

Read More