ஒரு மணித்தியாலம் மட்டுமே உறங்குவேன்! சம்பள பணமும் வழங்கப்படுவதில்லை!- 18 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய பெண் தெரிவிப்பு
பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த ஆர். பிரேமவதி என்னும் இலங்கை பணிப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். பிரேமவதிக்கு 18 வருட காலத்திற்கும் கிடைக்க வேண்டிய சம்பள பணமாக 18 லட்சம் ரூபா காசோலையினை அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று வெளிநாட்டு…
