நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினரான குமார் வெல்கம, எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இன்று (நேற்று) அறிவிப்பதாக ஏற்கெனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது…