ஊழல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மையை உலகுக்கு கொண்டுவருவோம்; மனம் திறந்தார் உபவேந்தர் இஸ்மாயில்
-நேர்காணல் முஹம்மத் அஷ்ரப்- தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசையை 16000வது இடத்தில் இருந்து 8000வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து காட்டியவரும் சம்மாந்துறையை மையப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான, கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். 01. கல்வி, அபிவிருத்தி மற்றும் அரசியல் விடயங்களில் தற்காலத்தில் இப்பிராந்தியத்தில் அதிகம் பேசப்படும் உங்களைப்பற்றியும் உங்களது கல்வி நிலை பற்றியும் கூறுங்கள் பதில்:- அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் பிறந்த நான், சம்மாந்துறை…
