Headlines

டுபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ ஏற்படவில்லை – பொலிஸார் மறுப்பு

உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக விளங்கி வருகிறது. துபாயில் சுற்றுலா தளங்களில் புர்ஜ் கலீபா கோபுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்டிடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, அதன் உயரம், அழகை பார்த்து பிரமித்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற…

Read More

ஜனாதிபதி மைத்திரிபாலவின், சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

“நாம் சுதந்திரமாக முன் னோக்கிப் பயணிக்கின் றோம் என்ற வகையில், இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளை கொண்டுவரும் வகையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை உறுதி செய்வோம். நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம், சுதந்திரம் மற்றும் சுபிட்சத்துக்கான ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியில் நாம் இணைந்து கொள்வோம்.” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் ஒரு…

Read More

மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: மீட்டுத் தருமாறு தாயொருவர் கதறல்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எனது மகள் காணாமல் போனாள்.. அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள். எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார். தொடர்ந்தும் அவர் விபரிக்கையில், அடுத்த நாள்…

Read More

நீதித்துறையின் சுயாதீனத் தன்மையே வெளிநாட்டுத் தலையீடுகளைக் தடுக்கும்: மங்கள சமரவீர

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என விரும்பினால் உள்நாட்டு நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியாளர்கள் உள்நாட்டு நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த தவறியமையாலேயே சர்வதேச நாடுகளின் தலையீடுகள் உள்விவகாரங்களில் அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸை விலக்கியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர்…

Read More

பிரதம நீதியரசரை இனிமேல் ஜனாதிபதி நியமிக்கமாட்டார்; அமைச்சர் ராஜித

பிரதம நீதியரசரை இனிமேல் ஜனாதிபதி நியமிக்கமாட்டார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் அரசியல்வாதியே. எனவேதான், பிரதம நீதியரசரை அரசியலமைப்பு சபையினூடாக நியமிப்பதற்கான அரசியல் மறுசீரமைப்பொன்றைச் செய்யவுள்ளோம். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அவருக்கு எதிரான விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு தெரிவுக்குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனால் அவரை மீள நியமிப்பதை நாம் விரும்பவில்லை. சிரேஷ்ட உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிக்க முடிவுசெய்தோம்….

Read More

சிறைக்கைதிகள் நாளை விடுதலை

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் சிறை கைதிகள் சிலர் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறை தண்டனை பெற்று வரும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் போது சிறு குற்றங்களிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களே விடுதலை செய்யப்படவுள்ளனர். மேலும் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளவர்களின் சிறை தண்டனை காலத்தில் ஒரு வாரத்தை குறைப்பதற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு…

Read More

இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அதற்கு திகதி ஒன்றை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும்.இந்தச் சந்திப்பில் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில்…

Read More

பைசர் முஸ்தபாவுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

தம்மை உடனடியாக சந்திக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். சிவில் விமான சேவை அமைச்சிற்கு உரிய சில விடயங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டமை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என முஸ்தபா தெரிவித்திருந்தார். இவ்வாறான ஓர் நிலையில் கடந்த நில நாட்களாகவே அமைச்சிற்கு சென்று கடமைகளை செய்யாதிருந்த…

Read More

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

முன்னிலை சோஷலிஸ கட்சியினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல்கள் ஆணையாளர் கோராத நிலையில் இராணுவத்தினரை அழைத்தமைக்கு எதிராகவே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயுத படைகளுக்கு பொலிஸாரின் அதிகாரங்களை வழங்கியே இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. அன்றிருந்த அரசு 2011ஆம் ஆண்டு, அவரசகாலச்சட்ட ஒழுங்குவிதிகளை நீக்கியது. அவ்வாறு இருந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 12ஆம் பிரிவை பயன்படுத்தி முழு நாட்டையும்…

Read More

துருக்கி-இலங்கை நட்புறவு அமைப்பின் சுதந்திர நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் – துருக்கி-இலங்கை நட்புறவு அமைப்பினால் நிர்வகிக்கப்படும் லேணியம் சர்வதேச பாடசாலையின் மாணவர்களுடன் இலங்கையின் சுதந்திர தினத்தினை முன்ணிட்டு பெப்ரவரி 6ஆம் திகதி காலை 09.00 – 11.00 மணிவறை கொழும்பு -7 சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின வைபவங்கள் கொண்டாப்பட உள்ளது. இக் கல்லூரியில் பயிலும் 400 மாணவர்களும் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள். இவ்விடயம் சம்பந்தமாக ராஜகிரிய லேனியம் பாடசாலையில் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிட்டிமுனை மக்கள் வரவேற்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிக மற்றும் வாணிப துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிட்டிமுனை மக்கள் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றினை நேற்று நடத்தினர். நுடை பெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் நற்பிட்டி முனை பிரதான வீதி ஊடாக விழா இடம் பெறும் இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். கல்முனை மாநாகர…

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாச வின் அரசியல் முன்மாதிரி

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் பேரியல் ;அஸ்ரப் மற்றும் காலம் சென்ற அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் ஆகியோர்கள் கபினட் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வாழ்ந்த கொழும்பு 7 ஸ்டோமோ கிரசன்ட் வீதியில் உள்ள வாசஸ்தலத்தை இன்று வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இவ் வீட்டை மீள அமைச்சின் செயலாளாருக்கு பொறுப்பளித்தார். இவ் வீட்டுகாக பல மில்லியன் ரூபாய்களை செலவழித்து கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச அழகுபடுத்தியுள்ளார்….

Read More