பொதுமக்களின் காணிகளை விடுவிக்க அதிகாரிகளுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பேச்சு
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மறிச்சுக்கட்டி,கரடிக்குளி,பாலக்குளி,கொண்டச்சி.காயாக்குளி,தம்பட்டை முதலியார் கட்டு,கொக்குபடையான்,கொண்டச்சிகுடா,சிலாவத்துறை கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை(2015-02-21) மேற்கொண்டார். முசலி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பிலும்,மக்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொள்ளும் வகையில் அமைச்சர் தலைமையிலான குழுவினரின் விஜயம் அமைந்திருந்ததாக முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரசேசபை தவிசாளர் எஹியான்,பிரதி…
