இலங்கையில் சிறு தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது – அமைச்சர் றிஷாத்
ஊடகப் பிரிவு இலங்கையில் சிறு தொழில் நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான் ஜப்பான் நாட்டு தூதுவர் நொபிஹிட்டோ ஹேயோ கைத்தொழல்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் இன்று தெரிவித்தார். புதிய அரசாங்கத்தில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜப்பான் றாட்டின் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன்,எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும இடையில் காணப்படும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது….
