ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு: மைத்திரிபால சிறிசேன
நாட்டில் இடம்பெற்ற பாரியளவிலான இலஞ்ச ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவென விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை இவ்வாரத்திற்குள் அமைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு ஏற்ப தாம் இந்நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் போது பட்டம், பதவிகள், தராதரங்கள், அரசியல் கட்சி பேதங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி…
