Headlines

மன்னாரில் விபத்து – ரிப்கான் பதியுதீன் வைத்தியசாலைக்கு விஜயம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வைபவமொன்றில் கலந்து கொள்ள வருகைத்தந்த அதிகாரியொருவரின் பிள்ளையொன்று மேல்மாடியொன்றிலிருந்து தவறி விழுந்ததையடுத்து அந்த பிள்ளை உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு காயங்குள்ளானவர் 5 வயது நிரம்பிய தரணிஸ் எனவும் இவர் நருவலிக்குளத்தை சேர்ந்தவர். இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் உடன் மன்னார் வைத்தியசாலைக்கு…

Read More

அமெரிக்க அப்பிள்களை வாங்காதீர்கள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளது என்று ணுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பி.ஜி.மகிபொல தெரிவித்தார். இந்த வருட ஆரம்பித்திலிருந்து லிஸ்ரெறியா மனோசைரோஜஸ்…

Read More

புதிய முறையில் தேர்தல் நடத்த மூன்று மாதம் தேவை – தேர்தல்கள் ஆணையாளர்

புதிய முறையில் தேர்தல் நடத்துவதாயின் குறைந்தது மூன்று மாத அவகாசம் தேவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமை குறித்து சகல தரப்பினருடனும் ஆராய்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் தேர்தல் பரப்புரைகளின் போது கட்அவுட் சுவரொட்டி எதனையும் பயன்படுத்தாமல் தேர்தலை நடத்துவதையே தான் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

அப்துல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ இணைப்பு)

அப்துல்லா  மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Read More

புதிய ஆளுநர்கள் நியமனம் (photos)

அஸ்ரப் ஏ சமத் மூன்று புதிய ஆளுநர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அந்த வகையில் மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு

அஸ்ரப் ஏ சமத் வடக்கு கிழக்கு மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாக பங்கீட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெறவேண்டும். என புதிய அமைச்சா் சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 24 மாவட்ட முகாமையாளா்கள், சமுா்த்தி அதிகார சபைகளின் சகல முகாமையாளா்களையும் நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா். எனது அமைச்சின் கீழ் வருகின்ற எந்தவொரு…

Read More

மட்டகளப்பு அரசியல் வாதிகளின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் – அமீர் அலி (photos)

ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி தான் இந்த பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கினங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் ஊழல்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அனைத்தையும் உடைத்தெரிவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் முதற்திட்டமாக இருக்கும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று(23.01.2015) செத்சிரிபாயாவில் உள்ள சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சில் தனது கடமையை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு அஹமட் இர்சாட்டின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். அமீர் அலி பிரதி…

Read More

சவூதி தூதரகத்தின் இரங்கல் குறிப்பில் கையொப்பம்

ஊடகப் பிரிவு நேற்று அதிகாலை வபாத்தான சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ்; அவர்களின் நினைவாக இலங்கை ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு புத்தகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தமது இரங்கற் குறிப்பினைனை எழுதினார். அதேவேளை, அப்துல்லா அப்துல் அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டும்,இலங்கை முஸ்லிம்களினதும்,அரசினதும் பிரதி நிதிகளின் குழுவில் ஒருவராக அமைச்சர் றிசாத்…

Read More

சவூதி மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி அனுதாபம்

சவூதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும் பிலுள்ள சவூதி தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதி, குறிப்புப் புத்தகத்தில் கையயழுத்திட்டார். ஜனாதிபதி யுடன் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமும் சென்றிருந்தார்.

Read More